டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறையில் (ஐ.பி) ஜூனியர் உளவுத்துறை அதிகாரி, டெக்னிக்கல் ஆபீசர் உள்பட 797 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.;

Update:2023-06-04 19:50 IST

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & டெலி-கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற துறைகளில் டிப்ளமோ படித்தவர்கள், மின்னணுவியல், கணினி அறிவியல், இயற்பியல், கணிதம் போன்ற பாடப்பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், பி.சி.ஏ. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

23-6-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-6-2023.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான தகவல்களை https://www.mha.gov.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்