நூலகர் பணியாற்ற நூலக அறிவியல்

புத்தகங்களை வகை பிரித்தல் மற்றும் பட்டியல் அமைப்புகள், தகவல் நடைமுறைபடுத்தல், விவரங்கள், ஆராய்ச்சி, ஆவணங்கள் பாதுகாப்பு மற்றும் கையெழுத்து பிரதி பாதுகாப்பு, நூலக நிர்வாகம், கணினி பயன்பாடுகள், நூலக திட்டம் காப்பக மேலாண்மை போன்றவையெல்லாம் நூலகக் கல்வியில் பயிற்றுவிக்கப்படுகிறது.;

Update:2023-05-12 20:18 IST

நூல்களின் தொகுப்பை முறையாக பாதுகாத்து பராமரித்து வைக்கும் பணியை செய்பவரே நூலகர். நூலகப்பணி என்பது புத்தகங்களை ஒருங்கிணைத்து பராமரித்து, நூலகத்தின் காவலனாக திகழ்வது தான்.

நூலகம் என்பது புத்தகங்கள், பத்திரிகைகள், வீடியோக்கள், கல்வி சார்ந்த பதிவுகள் போன்றவை நிறைந்தவை. இவைகளை முறையாக, வரிசைப்படுத்தி, பாதுகாத்து மற்றும் தெளிவாக தெரியும் படி அடுக்கி வைப்பது நூலகர் பணியாகும்.

முன்பெல்லாம் புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் எல்லாமே காகித வடிவத்தில் நிறைந்திருந்தது. ஆனால் இன்றோ நவீன தொழில்நுட்ப சாதனங்களான சிடி டிவிடி கொண்டவைகளாகவும், நூலகமாகவும் மற்றும் தானியங்கி அமைப்பு கொண்ட நூலகங்களாகவும் இருக்கின்றன.

அலுவலகங்கள் கல்வி நிலையங்கள் பொது நூலகங்கள், சிறப்பு பிரிவு நூலகங்கள் என்று பல வகையான நூலகங்கள் உள்ளன. வாகனங்களில் செய்யப்படும் வாடகை நூலகங்களும் (மொபைல் லைப்ரரி) உள்ளன. ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்களில் அத்துறை கல்வி சார்ந்த நூலகங்கள், பொறியியல், மருத்துவம், இசை, கலை போன்ற பிரிவுகளிலும் செயல்படுகின்றன. இவற்றைத் தவிர கண் தெரியாதவர்களுக்கு பிரெய்லி எழுத்து புத்தகம் கொண்ட நூலகங்களும் இயங்கி வருகின்றன.

புத்தகங்களை வகை பிரித்தல் மற்றும் பட்டியல் அமைப்புகள், தகவல் நடைமுறைபடுத்தல், விவரங்கள், ஆராய்ச்சி, ஆவணங்கள் பாதுகாப்பு மற்றும் கையெழுத்து பிரதி பாதுகாப்பு, நூலக நிர்வாகம், கணினி பயன்பாடுகள், நூலக திட்டம் காப்பக மேலாண்மை போன்றவையெல்லாம் நூலகக் கல்வியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

பி.எல்.ஐ.எஸ் (BLIS) என்ற இளங்கலை நூலக மற்றும் தகவல் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. இதனை மூன்றாண்டு பட்டப்படிப்பாகவும், ஓராண்டு பட்டப்படிப்பாகவும் பல கல்வி நிறுவனங்கள் அளிக்கின்றன.

வேறு ஏதேனும் பட்டப்படிப்பு பயின்றும் இப்பட்டப்படிப்பில் சேரலாம்.இதில் முதுகலையோ, பட்டமேற்படிப்போ ஆராய்ச்சி படிப்பிகளோ கூட உள்ளன. பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிலையங்களில் இப்பாடப்பிரிவு பிரத்யோகமாக இருக்கிறது.

நூலக பணியாளர், நூலக உதவியாளர், இளைய நூலகர், துணை நூலகர், முதன்மை தகவல் ஆய்வாளர் போன்ற வரிசையில் இவர்களின் பதவிகள் உயரும்.

அரசு மற்றும் தனியார் நூலகங்கள், நிழற்பட நூலகங்கள், செய்தி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், தகவல் நிறுவனங்கள் மற்றும் மையங்கள், வெளியுறவு அமைச்சகங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பெரிய தொழில் நிறுகூன நூலகங்கள் போன்றவற்றில் இப்பாடம் பிரிவை படித்தோர் பணி செய்யலாம்.

வருமானத்துடன், அமைதியான மனநிலையையும், பரபரப்பும் சத்தமும் இல்லாத பணி சூழலையும் வழங்கும் பணி, நூலகர் பணி என்றால் மிகையல்ல.

Tags:    

மேலும் செய்திகள்