என்ஜினீயர்களுக்கு வேலை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானி, என்ஜினீயர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.;
மொத்தம் 303 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.இ., பி.டெக் (எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்ப்யூனிகேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
14-6-2023 அன்றைய தேதிப்படி 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-6-2023.
விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.isro.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.