ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலை
ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 ஜூனியர் உதவி மானேஜர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.;
பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி அறிவு பெற்றவர்களாகவும், பிராந்திய மொழிப்புலமை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
31-8-2023 அன்றைய தேதிப்படி விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 31-8-1998-க்கு முன்போ, 31-8-2003-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-9-2023.
விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.idbibank.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.