ஐ.சி.எப். தொழிற்சாலையில் பயிற்சி பணி
சென்னையில் இயங்கும் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்) தொழில் பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியாகி உள்ளது.;
தச்சர், எலக்ட்ரீஷியன், பிட்டர், மெஷினிஸ்ட், ஓவியர், வெல்டர், கதிரியக்கவியல், நோயியல் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 782 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
30-6-2023 அன்றைய தேதிப்படி 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-6-2023.
விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.