'செயற்கை நுண்ணறிவு' மூலம் நடக்கும் மோசடி

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.;

Update:2023-09-14 18:05 IST

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினி மூலம் மனித நுண்ணறிவு செயல்முறைகளை உருவாக்குவதாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் நன்மைகள் இருந்தாலும், தீமைகளே அதிகம்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படங்களை நிர்வாண புகைப்படமாக மாற்றி, உங்களுக்கே புகைப்படத்தை அனுப்புவார்கள். ''நான் கேட்கும் தொகையை நீங்கள் எனக்கு செலுத்தாவிட்டால், நான் இந்தப் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன்'' என்று மிரட்டி பணம் பறிப்பார்கள். இந்த மோசடி, குறிப்பாகப் பெண்களைக் குறிவைத்தே நடக்கிறது. எனவே சமூகவலைத்தளங்களில் உங்களின் தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிராதீர்கள், பிரைவசி செட்டிங்கைப் பயன்படுத்துங்கள். இது ஒருவிதம் என்றால், அழைப்பு வடிவில் மற்றொரு மோசடியும் நடக்கிறது.

உங்களுக்கு தெரிந்த நபரின் புகைப்படத்தையே, அந்த நபரின் உருவத்தையே வீடியோ கால் அழைப்பில் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களை அழைப்பது போலவே உங்களுக்கு வீடியோ காலில் தொடர்புகொண்டு ''அவசரமாக பணம் தேவைப்படுகிறது தாருங்கள்'' என்று கேட்பார்கள்.

நீங்களும் பேசியது உங்களுக்குத் தெரிந்த நபர்தானே என்று நினைத்துக்கொண்டு அவருக்குப் பணத்தை அனுப்புவீர்கள். ஆனால் அது அவரல்ல. அந்த செயற்கை நுண்ணறிவின் உதவியால் உங்களுக்குத் தெரிந்த நபரின் உருவத்தைப் போல் தோற்றத்தை மாற்றிக் காண்பிக்கும் மோசடி நபரின் விளையாட்டு இது. இந்த மோசடியானது வீடியோ காலில் மட்டும் அல்ல, வாய்ஸ் காலிலும் நடக்கிறது. எனவே நாம்தான் இந்த நவீன யுகத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்