உற்சாகமூட்டும் படிப்பு உணவு தொழில்நுட்பம்

உணவுத் தொழில்நுட்பம் என்பது உணவுப் பொருட்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், பாதுகாத்தல், பேக்கேஜிங், லேபிளிங், தர மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் உள்ள நுட்பங்களைக் கையாளும் ஒரு அறிவியல் பிரிவு ஆகும்.;

Update: 2023-05-12 16:30 GMT

இது புதிய உணவுப் பொருட்களை உருவாக்குதல், அவற்றின் பேக்கேஜிங் மற்றும் பாதுகாக்கும் முறைகள் ஆகியவற்றைக் கையாள்கிறது. மேலும் மது, பானங்கள், எண்ணெய் பொருட்கள் போன்ற சிறப்பு உணவுப் பொருட்களின் பகுதிகளையும் கையாள்கிறது.

உணவுத் தொழில்நுட்பம் என்பது பல்வேறு உணவுப் பொருட்களின் உற்பத்தி, பாதுகாத்தல், சோதனை மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றைக் கையாளும் அறிவியல் துறையாகும். உணவுத் தொழில்நுட்பப் படிப்புகள், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், அவைகளின் ஊட்டச்சத்துக் குணங்களை மேம்படுத்துவதற்கும்,பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கும் பல்வேறு திறன்களைக் கற்பவர்களுக்கு வழங்குகின்றன.

உணவு தொழில்நுட்பம் என்பது மூன்று வருட B.Sc பாடதிட்டமாக அல்லது நான்கு வருட BTech பாட திட்டமாக வழங்கப்படும் ஒரு துறையாகும். உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் சேதம் மற்றும் கெட்டுப்போவதை எதிர்க்கும் பல்வேறு செயல்முறை விளக்கங்கள் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. பவர்-ஃபுட்கள் அல்லது சூப்பர் ஃபுட்கள் போன்ற உணவுப் பொருட்களின் சுவைகள் மற்றும் ஊட்டச்சத்து குணங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். உணவுத் தொழில்களை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் அவர்கள் பெறுகிறார்கள்.

உணவு தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று, தொகுக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்துக்களை சேர்ப்பதாகும். ஆயத்த (ready to cook)சூப்கள், உணவுப் பொருட்கள் மற்றும் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் போன்ற உணவுகளை தயாரிப்பதற்கும் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.இந்த துறைகளில் அவர்கள் மேற்படிப்பும் படிக்கலாம். பால் தொழில்நுட்பம், மதுபானங்கள், பேக்கரி மற்றும் மிட்டாய் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் பேக்கேஜிங் போன்ற உணவு தொழில்நுட்பத்தில் பல்வேறு துணை பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெறலாம்.

உணவு தொழில்நுட்பம் படிப்பில் மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் உணவு தொழில்நுட்பத்தில் பட்டம், டிப்ளமோ அல்லது முனைவர் பட்டப்படிப்பைத் தொடரலாம்.

இளங்கலை மட்டத்தில் படிப்பைத் தொடர, விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் மற்றும் வீட்டு அறிவியல் போன்ற பாடங்களுடன் அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் இதற்குபல்கலைக்கழகம்/ கல்லூரியால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் (பொதுவாக 50% - 60%). முதுகலை பட்டத்தில் உணவு தொழில்நுட்பப் படிப்பைத் தொடர, விண்ணப்பதாரர்கள் ஒரு பல்கலைக்கழகம்/ கல்லூரியில் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களுடன் BSc (இயற்பியல், கணிதம், உயிரியல் மற்றும் வேதியியல்) அல்லது BTech/ BE (உணவு தொழில்நுட்பத்தில்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்