வேலைவாய்ப்பு செய்திகள்: பட்டதாரிகளுக்கு பணி

Update:2023-07-22 14:26 IST

மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளில் (இ.எம்.ஆர்.எஸ்.) பட்டதாரி ஆசிரியர்கள் (5,660), விடுதி வார்டன்(ஆண்-335), விடுதி வார்டன் (பெண்-334) என 6,329 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடம் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புடன் பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இசை, நுண்கலை, உடற்பயிற்சி, நூலகர் பணிக்கு சம்பந்தப்பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். வார்டன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

18-8-2023 அன்றைய தேதிப்படி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்து தேர்வு, மொழி திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-8-2023.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு https://emrs.tribal.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்