சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுங்கள்!

சர்க்கரைவள்ளி கிழங்கை ருசிக்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை பேண, அவசியம் சாப்பிட்டுவர வேண்டும். இதில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

Update: 2023-07-15 10:33 GMT

* பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்தும் காக்கிறது.

* ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் சரும பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கிறது.

* சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது.

* இதிலிருக்கும் வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் வைட்டமின் டி அவசியமானதாகிறது.

* வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

* இதிலிருக்கும் வைட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது. புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் துணைபுரிகிறது. பழுதடைந்த செல்களை சரிசெய்வதிலும், புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளி கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

* சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்தோ, சுட வைத்தோ அல்லது சிப்ஸ் தயாரித்தோ சாப்பிடலாம். அதிலிருக்கும் சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்