கோல் இந்தியா நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி
கோல் இந்தியா நிறுவனத்தில் 560 மேலாண்மை பயிற்சி பணிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. சுரங்கம், சிவில் சார்ந்த என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.;
புவியியல் படிப்பில் எம்.எஸ்சி., எம்.டெக் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 31-8-2023 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2023. https://www.coalindia.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.