சாட் ஜி.பி.டி. எனும் அசுரன்..!

சாட் ஜெனரேட்டிவ் ப்ரீ-டிரெரின்ட் டிரான்ஸ்பார்மர் எனப்படும் ஜி.பி.டி. (chat GPT) என்பது ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதனால் மனிதர்கள் பேசும் மொழியை புரிந்து கொண்டு அதே சொற்களை பயன்படுத்தி தெளிவாக பதிலளிக்க முடியும்.

Update: 2023-04-13 14:15 GMT

சாட் பாட் மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் அனைத்தும் உங்களோடு உரையாடும் தொழில்நுட்பத்தின் முகங்கள் என்றால் ஜி.பி.டி அதன் உயிர் நாடி. அதன் மையத் தொழில்நுட்பம் என்றும் கூறலாம்.

அதாவது நாம் கொடுக்கும் உள்ளீட்டை புரிந்து கொண்டு இயற்கையான மொழியில் சொற்களை கோர்த்து விடை தரும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் இந்த ஜி.பி.டி.

இதற்கு நிறைய தரவுகள் மற்றும் சொல் வடிவ தரவுகள் கொடுக்கப்படும். அதன் பிறகு ஜி.பி.டி. டிரான்ஸ்பார்மர் என்ற அல்காரிதத்தை (கணித சூத்திரத்தை) பயன்படுத்தி ஒரு மனிதன் விடையளிப்பது போல தன்னிடம் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி பதில் அளிக்க கற்றுக் கொள்ளும்.

பொதுவாக பல தரப்பட்ட கட்டுரைகள் மற்றும் உரையாடல்கள் ஜி.பி.டி.க்கு வழங்கப்படும். அதனை பயன்படுத்திக் கொண்டு மொழியின் கட்டமைப்புகளையும், வடிவங்களையும் கற்றுக் கொள்ளும். இந்த புதிய தொழில்நுட்பம் போதுமான அளவுக்கு மொழி குறித்து உணர்ந்து கொண்ட பிறகு கேட்கும் கேள்விகளை பொறுத்து சொந்தமாக தன் சொல் வங்கியில் இருந்து வார்த்தைகளை பயன்படுத்தி பதிலளிக்க தொடங்கும்.

ஜி.பி.டி. தொழில்நுட்பம் டிரான்ஸ்பார்மர் என்ற அல்காரிதத்தை பயன்படுத்தி வருகிறது. இந்த அல்காரிதம் நியூரல் நெட்வொர்க்கின் அடிப்படையில் இயங்குகின்றது. இது ஒரு வகையான கணினி ப்ரோக்ராமிங் தான் என்றாலும் அது மனித மூளை வேலை செய்வதையொட்டி வடிவமைக்கப்பட்டது.

இந்த அல்காரிதத்தால் தரவுகள் மற்றும் வரி வடிவங்கள் போன்றவைகளை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ள முடியும். அதற்கு மனிதர்கள் பேசுவதை போன்ற உரையாடல்களை ஜி.பி.டி. உருவாக்கி பதிலாக கொடுக்கிறது.

ஜி.பி.டி. கொண்டு கட்டுரைகள், கதைகள் என பலவற்றை உருவாக்க முடியும். கட்டுரைகள் உருவாக்குபவர்களுக்கு நேரத்தையும், முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது. யார் வேண்டுமானாலும் இலவசமாக கணக்கை உருவாக்கி Chat GPT யை பயன்படுத்த முடியும்.

சாட் பாட் மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் அனைத்தும் உங்களோடு உரையாடும் தொழில்நுட்பத்தின் முகங்கள் என்றால் ஜி.பி.டி அதன் உயிர் நாடி.

Tags:    

மேலும் செய்திகள்