பரந்த வாய்ப்புகள் அளிக்கும் - பட்டயக் கணக்கியல் படிப்புகள் (சிஏ)

சிஏ அல்லது பட்டயக் கணக்கியல் என்பது தணிக்கை, வரிவிதிப்பு மற்றும் கணக்கியல் பற்றிய அறிவைக் கையாளும் ஐந்தாண்டு காலப் படிப்பாகும்.புது தில்லியில் இயங்கி வரும் ஐசிஏஐ (இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்) இந்த பாடத்திட்டத்தை நடத்துகிறது.;

Update:2023-05-12 21:30 IST

இந்த கணக்கியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் ஒரு நிறுவனத்தின் வரிவிதிப்பு மற்றும் நிதித் துறையில் பணியாற்றலாம். .மேலும் ஆலோசகர்கள், தணிக்கையாளர்கள், நிதி மேலாளர்கள் போன்ற பதவிகளை வகிக்கலாம்.

சிஏ படிப்பு நிலைகள்

* சிஏ ஃபவுண்டேஷன்: சிஏ படிப்பில் நுழைவதற்கான முதல் படி என்று இதனைச் சொல்லலாம். சிஏ படிப்பில் நுழைவதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் இது முதல் அடிப்படைத் தேர்வாகும்.இந்த தேர்வு ஐசிஏஐ(இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்) மூலம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.

பாடத்திட்டமானது சிஏ இன் பயன்பாடு, புரிதல் மற்றும் அறிவு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.இந்த அடிப்படைத் தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும் நூறு மதிப்பெண்களைக் கொண்ட தேர்வாகும்.மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். .இந்தப் படிப்பில் நுழைவதற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

* சிஏ இன்டர்மீடியட்: இது சிஏ படிப்பில் நுழைவதற்கான இரண்டாம் நிலை இடைநிலை படிப்பாகும்.இந்தப் படிப்பு மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் பட்டயக் கணக்காளராகத் தேவையான அத்தியாவசிய திறன்களை வழங்குகிறது. இந்த இடைநிலைப் பாடமானது இரண்டு குரூப்பாக பிரிக்கப்பட்டு உள்ளது. சிஏ அடிப்படைத் தேர்வை முடித்தபிறகு, ஆர்வமுள்ளவர்கள் சிஏ இடைநிலைத் தேர்வை தனியாகவோ அல்லது இணைந்தோ (சப்ஜெக்ட் குரூப்ஸ்) முயற்சிக்கலாம். சிஏ அடிப்படைத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த இன்டர்மீடியட் படிப்பில் சேரலாம். மேலும், இளங்கலை அல்லது முதுகலையில் 50 முதல் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருப்பது அவசியமாகும்.

* சிஏ ஃபைனல்: இது சிஏ படிப்பின் இறுதிநிலை ஆகும். இந்த இறுதிப் படிப்பில், மாணவர்கள் அனைத்து பாடங்களையும் ஒரே நேரத்தில் படித்து தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாத பட்சத்தில், அவர்கள் முழு படிப்பிற்கும் மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நேரிடும். சிஏ இறுதிப் படிப்பில் நுழைவதற்கு இடைநிலை படிப்பின் இரண்டு குரூப்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென் திறன்களில் நான்கு வார மேம்பட்ட ஒருங்கிணைப்பு பாடமும் இந்தப் படிப்பை படிப்பதற்குத் தேவைப்படுகிறது. கூடுதலாக, மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் நிர்வாக தொடர்பு திறன் ஆகியவை விருப்பப் பாடங்களாக உள்ளன. இறுதித் தேர்வுக்கு முன், மாணவர்கள் இந்தத் திறன்களை கடந்த இரண்டு வருட வேலைப் பயிற்சிக்குள் முடிக்க வேண்டும்.

சிஏ படிப்புகள் மற்றும் கால அளவு

சிஏ பட்டதாரி படிப்பு மேம்பட்ட நிதி அறிக்கை, மேலாண்மை கணக்கியல், ஸ்ட்ராடஜிக் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட், தொழில்முறை நெறிமுறைகள், தகவல் அமைப்பு மேலாண்மை மற்றும் மேம்பட்ட தணிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பொது மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திறன் படிப்பு (ஜிஎம்சிஎஸ்), 15 நாள் கட்டாய பயிற்சி வகுப்பு ஆகும்.

பாடநெறி காலங்களின் பட்டியல்

* பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு( சிபிடி முறையைப் பயன்படுத்தி)-நான்கரை ஆண்டுகள்

* நேரடி நுழைவுத் திட்டம்- மூன்று ஆண்டுகள்.

பொதுவான நிபுணத்துவ பாடத்திட்டத்தின் பாடங்கள்:

* கணக்கியலின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறை

* வணிகச் சட்டங்கள் மற்றும் வணிகக் கடிதம்

* வணிகக் கணிதம், தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் புள்ளியியல்

* வணிகப் பொருளாதாரம் மற்றும் வணிகம் மற்றும் வணிக அறிவு

ஒருங்கிணைந்த இடைநிலை நிபுணத்துவ பாடத்திட்டத்தின் பாடங்கள்:

* நிறுவனச் சட்டம்

* வரி விதிப்பு சட்டம்

* மேம்பட்ட கணக்கியல்

இறுதி நிபுணத்துவ பாடத் திட்டத்தின் பாடங்கள்:

* நிதி கணக்கியல்

* நிதி மேலாண்மை

* மேம்பட்ட தணிக்கை

சிஏ பட்டதாரியாக மாற்றும் திறன்கள்:

இத்துறை பட்டதாரிகளை வெற்றிகரமானவர்களாக உருவாக்க உதவும் மென்மையான மற்றும் கடினமான திறன்கள் தேவை.சிஏ தேர்வில் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறவும், அவர்களின் வாழ்க்கைப் பாதையில் அவர்களுக்கு உதவும் இந்தத் திறன்கள் அவசியமாகும். வேலை செய்யும் இடத்தில் தொழில் வல்லுநர்கள் சக பணியாளர்களுடன் ஒப்பிடும்பொழுது கூர்மையான அறிவைப் பெறுவதற்கு கீழே குறிப்பிட்டுள்ள திறன்கள் அவசியம். அந்தத் திறன்களில் சில.:

* குவாண்டிடேட்டிவ் ஸ்கில்ஸ்

* கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்

* அழுத்தமான சூழ்நிலைகளிலும் வேலை செய்யும் திறன்

சிஏ பட்டப்படிப்புக்குப் பிறகு தொழில் வாய்ப்புகள்:

இந்தப் படிப்பு இதைப் படித்த பட்டதாரிகளுக்கு மிகவும் பலனளிக்கும் மற்றும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை பாதையாக்கும். இத்துறை பட்டதாரிகள் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் பணியாற்றலாம்..வங்கிகள்,பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் (பிரைவேட் லிமிடெட்),தணிக்கை நிறுவனங்கள் மற்றும் சட்ட நிறுவனங்களிலும் பணியாற்றலாம். இத்துறை பட்டதாரிகள் தொடக்க ஊதியமாக எட்டு லட்சங்கள் வரை பெறுகிறார்கள். அனுபவம், திறமை, வேலை செய்யும் நிறுவனம் மற்றும் வகிக்கும் பதவியைப் பொறுத்து ஊதியமும் உயரும்.

Tags:    

மேலும் செய்திகள்