டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்) சார்பில் 119 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.;
டிப்ளமோ (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில்), ஐ.டி.ஐ. (மெஷினிஸ்ட், டர்னர்), நர்சிங் (பி.எஸ்சி நர்சிங்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
18-10-2023 அன்றைய தேதிப்படி 29 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்சிங் பணிக்கு மட்டும் 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-10-2023. விண்ணப்பிக் கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www.bemlindia.in/careers/current-recruitments என்ற இணையபக்கத்தில் பார்வையிடலாம்.