பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மத்திய அரசின் அணு சக்தி துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4,374 தொழில்நுட்ப அதிகாரி, அறிவியல் உதவியாளர், தொழில் நுட்பவியலாளர், ஸ்டைபண்டரி பயிற்சியாளர் உள்பட 4,374 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.;

Update:2023-04-30 17:45 IST

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பி.எஸ்சி, எம்.எஸ்சி, பி.இ., பி.டெக் கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

22-5-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-5-2023.

விண்ணப்பிக்கும் விதம், தேர்வு செய்யப்படும் நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://recruit.barc.gov.in/barcrecruit என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்