கண்ணசைவில் இயங்கும் சக்கர நாற்காலி

கஷ்டப்பட்டு பட்டனை அழுத்தி, லீவரை இழுத்து எல்லாம் இயக்க வேண்டிய டென்ஷன் இல்லை. சும்மா கண்ணை சிமிட்டினாலே போதும்... ஓடும், திரும்பும், நிற்கும். என்னவென்று கேட்கிறீர்களா? நாற்காலி... சக்கர நாற்காலி. ஜெர்மனியை சேர்ந்த மாணவிகள் இருவர், இதை உருவாக்கி உள்ளனர்.

Update: 2023-09-14 15:15 GMT

மின்சாரத்தால் இயங்கும் இந்த சக்கர நாற்காலியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த கண் சிமிட்டினாலே போதுமானது. முன்னோக்கிச் செல்ல ஒரு சிமிட்டல், இடப்பக்கம் திருப்ப 2 சிமிட்டல்கள், வலப்பக்கம் திருப்ப 3 சிமிட்டல்கள், பின்னோக்கிச் செல்ல 4 சிமிட்டல்கள், நிறுத்த அரை நொடி சிமிட்டல் என இஷ்டத்துக்கு சிமிட்ட வேண்டியதுதான்!

கண் சிமிட்டலுக்கும் நாற்காலியின் ஓட்டக் கட்டுப்பாட்டிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா..? இருக்கிறது. அதற்கு இந்த நாற்காலியில் அமர்ந்திருப்போர் கட்டாயம் மூக்குக் கண்ணாடி அணிய வேண்டும். ஏனெனில் கண்ணாடி பிரேமில் ஒளி உணர் பொருட்கள் (Photo Sensitive elements) பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் நாற்காலிக்குத் தேவையான சிக்னல்கள், கண் சிமிட்டல் மூலம் செல்லும். கிட்டத்தட்ட ரிமோட் கண்ட்ரோல் போல.

இதேபோல நிறைய தயாரிப்புகள் இருந்தாலும், ஜெர்மனி மாணவிகளின் தயாரிப்புதான், மலிவானது. குறிப்பாக, ஏழை நாடுகளில் பக்கவாதம், உடல் செயலிழப்பு போன்ற பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்காகவே இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்