சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.;

Update:2024-08-08 16:49 IST

சென்னை,

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே சென்னையில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னை வளசரவாக்கம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், ராமாபுரம், காரம்பாக்கம் மற்றும் ஜெயராம்நகர் ஆகிய பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்