சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு நேரத்தில் மழை பெய்தது.;

Update:2025-01-13 07:37 IST

சென்னை,

கிழக்கு இலங்கை கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு நேரத்தில் மழை பெய்தது.

இந்நிலையில், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்