இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-08-18 11:22 GMT

கோப்புப்படம்

சென்னை,

தென்னிந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 7 மணிவரை தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி

கரூர்

தேனி

சேலம்

நாகை

மதுரை

திருச்சி

நீலகிரி

ஈரோடு

கடலூர்

கோவை

திருப்பூர்

தருமபுரி

விருதுநகர்

தஞ்சாவூர்

திருவாரூர்

திண்டுக்கல்

கிருஷ்ணகிரி

மாயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்