தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் நாளை (சனிக்கிழமை) சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.