சென்னையில் அதிகாலை லேசான மழை

சென்னையில் அதிகாலை லேசான மழை பெய்தது.;

Update:2024-09-06 06:49 IST

சென்னை,

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. சென்னையில் தாம்பரம், அடையாறு, பட்டினப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், திருவல்லிக்கேணி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதிகாலை பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்