நீலகிரி, கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2024-07-27 03:01 GMT

சென்னை,

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதவிர மேற்கு வங்காளத்தையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்துக்கான மழைக்கு வாய்ப்பு குறைவு எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்