சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அடையார், கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. குறிப்பாக, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.