இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-01 14:06 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று ஒருசில பகுதிகளில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்