18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Update: 2024-09-23 11:11 GMT

சென்னை,

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுவையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்