தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-01 17:25 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று ஒருசில பகுதிகளில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்