தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

Update: 2024-08-04 08:11 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05-08-2024: கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06.08.2024 மற்றும் 07.08.2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்