தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Update: 2024-07-14 14:07 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், கடலூர், அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்