மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் வியூ சோனிக் நிறுவனம் வி.பி 16 என்ற பெயரில் ஓலெட் திரையைக் கொண்ட தொடுதிரை மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது பயணத்தின்போது எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஸ்டாண்ட் உள்ளது.
இதில் 5 வெவ்வேறு நிலைகளில் திரையை வசதிக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்ய முடியும். உள்ளீடாக 2 ஸ்பீக்கர்கள் உள்ளன. 15.6 அங்குல திரையைக் கொண்ட இந்த மானிட்டரின் விலை சுமார் ரூ.75,000.