புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் விளைவிக்கபட்ட தக்காளி பூமிக்கு வருகிறது

தற்போது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியை கொண்டு செடியை வளர்த்து அசத்தி இருந்தனர் விஞ்ஞானிகள்.

Update: 2023-04-15 09:14 GMT

வாஷிங்டன்:

1982 முதல், விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக தாவரங்களை வளர்த்து வருகின்றனர். இதில் ரஷியா மிகவும் முன்னேறியுள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல், விண்வெளி நிலையத்தில் ரஷிய தாங்களாகவே வளர்க்கும் தாவரங்களிலிருந்து காரமான உணவை உண்கின்றனர்.

2015 ஆம் ஆண்டில், அமெரிக்க விஞ்ஞானிகள் விண்வெளி நிலையத்தில் கீரை வளர்ப்பதில் வெற்றி பெற்றனர்.

சீனா முட்டைக்கோஸ், கீரை, முள்ளங்கி, பட்டாணி மற்றும் பல வகைகள் இப்போது விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்படுகின்றன.

புவியீர்ப்பு இல்லாத இடத்தில் தாவரங்களை வளர்ப்பது சவாலானது. விண்வெளியில் உணவுப் பயிரிடுதல் என்பது விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கு மட்டுமின்றி, செவ்வாய் கிரகப் பயணங்கள் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கும் இன்றியமையாதது.

விண்வெளிப் பயணங்களில், பூமியிலிருந்து முற்றிலும் மனிதர்களுக்கான உணவைக் கொண்டுவருவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. குறிப்பாக சில மாதங்கள் மற்றும் வருடங்கள் நீடிக்கும் செவ்வாய் பயணம். பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை கொண்டு செல்லும் திறன் கொண்ட ராக்கெட்டுகளை நம்மால் உருவாக்க முடியும். ஆனால் நிலத்தில் இருந்து முழு பருவத்திற்கான உணவை எடுத்துச் செல்வது எளிதானது அல்ல. அத்தகைய விண்வெளி விவசாயம் அதற்கான போம் வழி.

தற்போது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியை கொண்டு செடியை வளர்த்து அசத்தி இருந்தனர் விஞ்ஞானிகள்.

நாசா மற்றும் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது விண்வெளியில் தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் பெரும்பாலானோர் தக்காளியை தங்கள் உணவில் சேர்த்து கொள்கிறார்கள்.

ஏற்கனவே பூமியில் விளைவிக்கப்படும் தக்காளிக்கு சரியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் விண்வெளி தக்காளி வேறு வருகிறது.

விண்வெளியில் ஆராய்ச்சி ரீதியாக தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்ட மினியேச்சர் கிரீன்ஹவுஸ் ஆய்வுக் கூடம் ஒன்றில் விஞ்ஞானிகள் தக்காளியை விளைவித்துள்ளனர். இது குட்டை ரக தக்காளி என நாசா தெரிவித்துள்ளது.

சுமார் 100 நாட்களுக்கு மேல் தக்காளி அங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. முறையே 90, 97 மற்றும் 104-வது நாட்களில் தக்காளி அறுவடை செய்யப்படுள்ளது. அதை பதப்படுத்தி அதன் ஊட்டச்சத்து சார்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் காலத்தில் நீண்ட கால விண்வெளி பயணத்தின் உதவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு என நாசா தெரிவித்துள்ளது.

ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை சார்பில் விண்வெளியில் தயாரித்த கிரிசடல்களும் அடங்கும் என தெரிகிறது. இந்த விண்கலம் பூமியை அடைந்ததும் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Tags:    

மேலும் செய்திகள்