பியூர் சவுண்ட் புரோ எக்ஸ் 1 வயர்லெஸ் சவுண்ட் பார்

Update: 2023-07-19 10:40 GMT

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் பியூர் சவுண்ட் புரோ எக்ஸ் 1 என்ற பெயரில் வயர்லெஸ் சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது. வீட்டிலிருந்தபடியே திரையரங்கில் காட்சிகளைப் பார்ப்பது போன்ற இசை அனுபவத்தை இந்த சவுண்ட் பார் வழங்கும்.

இதில் முப்பரிமாண ஒலி பரவல் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. கூடுதலாக 5.25 அங்குல சப்-ஊபரும் அளிக்கப் படுகிறது. ஒட்டுமொத்தமாக 100 வாட் திறனை இது வெளிப்படுத்தும். ரிமோட் கண்ட்ரோல், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. டி.வி., ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்டவற்றுடன் இதை இணைத்து பயன்படுத்த முடியும். கருப்பு நிறத்தில் வந்துள்ள சவுண்ட் பாரின் விலை சுமார் ரூ.5,999.

Tags:    

மேலும் செய்திகள்