புரோமேட் நிறுவனம் வயர்லெஸ் இயர்போனை 'புரோ பாட்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. காதினுள் கச்சிதமாக பொருந்தும் தன்மை கொண்டது. சுற்றுப்புற இரைச்சலை முற்றிலுமாகத் தவிர்த்துவிடும். குரல் வழிக் கட்டுப்பாட்டில் செயல்படும். புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. 5 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். சார்ஜிங் கேசில் 25 மணி நேரம் செயல் படுவதற்குத் தேவையான மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்பட்டிருக்கும். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.2,999.
ஸ்மார்ட் கடிகாரம்: புரோமேட் நிறுவனம் 'எக்ஸ்' என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.95 அங்குல வளைவான பகுதிகளைக் கொண்ட டி.எப்.டி. திரை உள்ளது. கடினமான சூழலையும் தாக்குப் பிடிக்கும் வகையில் இதன் மேல்பாகம் உலோகத்தால் ஆனது. தூசி மற்றும் நீர் புகா தன்மை கொண்டது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 10 நாட்கள் வரை செயல்படும்.
இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் காட்டுவதோடு, தூக்கக் குறை பாட்டையும் சுட்டிக்காட்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளம் உள்ள ஸ்மார்ட்போனுடன் இணைத்து செயல்படுத்தும் வசதி, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.3,999.