ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான பிளாபுங்க்ட் நிறுவனம் ஆண்ட்ராய்டு டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. 40 அங்குல அளவில் சிக்மா சீரிஸில் இவை வெளிவந்துள்ளன. இனிய இசையை வழங்க 40 வாட் ஸ்பீக்கர் உள்ளது. 512 ரேம் கொண்டது.
இதில் 4 ஜி.பி. நினைவகம் உள்ளது. லேப்டாப், மொபைல் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைத்து பயன்படுத்த முடியும். இதில் அமோல்ஜிக் குவாட் கோர் பிராசஸர் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.13,400.