ஓரியாமோ வயர்லெஸ் இயர்போன்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ஓரியாமோ நிறுவனம் வயர்லெஸ் இயர்போன்களை பிரீபாட்ஸ் 4 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.;
உயர் தொழில்நுட்பம் கொண்டது. இதில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் உள்ளது. புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. ஸ்மார்ட்போன் இருப்பிடத்தை உணர்த்தும் வசதி, தொடு உணர் சென்சார் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.1,999.