ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஜே.பி.எல். நிறுவனம் புதிதாக டியூன் பீம் மற்றும் டியூன் பட்ஸ் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. காதில் கச்சிதமாகப் பொருந்தும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது.
புளூடூத் இணைப்பு வசதியுடன், தேவைப்பட்டால் ஒரு காதில் இயர்போனை மட்டும் பயன்படுத்தும் வசதியும் கொண்டது. இதனால் பயணத்தின்போது நண்பர்கள் ஆளுக்கொரு காதில் இயர்போனை பொருத்திக் கொண்டு இனிமையான பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தபடியே பயணிக்கலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை செயல்படும். ஜே.பி.எல். டியூன் பீம் மாடலின் விலை சுமார் ரூ.6,499. பட்ஸ் மாடலின் விலை சுமார் ரூ.5,499.