ஸ்மார்ட் மோதிரம் அறிமுகம்

Update:2023-06-29 12:57 IST

நவீன டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் கடிகாரத்தைத் தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் மோதிரம் அறிமுகமாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ரா ஹியுமன் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள ஸ்மார்ட் மோதிரங்களில் இதன் எடை குறைவானது (2.4 கிராம்) என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மேல் பகுதி ஜெட் விமானங்களில் பயன்படுத்தும் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. தோலில் அலர்ஜி ஏற்படாமல் இருப்பதற்காக எபாக்ஸி ரெசின் எனும் மேல் பூச்சு பூசப்பட்டுள்ளது.

தூக்க குறைபாட்டை அறிவுறுத்தும், இதய துடிப்பு உள்ளிட்ட உடல் நலன் சார்ந்த விஷயங்களை துல்லியமாக பதிவு செய்யும். தோலில் படாமலேயே உடலின் வெப்பநிலையை உணரும் வகையிலான சென்சார் கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 நாட்கள் வரை செயல்படும். புளூடூத் இணைப்பு வசதி உள்ளதால், அதன் மூலம் ஸ்மார்ட்போனுக்கு தகவல்களை அனுப்பும். இதன் விலை சுமார் ரூ.24,999.

Tags:    

மேலும் செய்திகள்