ஹானர் நிறுவனம் புதிதாக எக்ஸ் 8 என்ற பெயரிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10.1 அங்குல முழு ஹெச்.டி. திரை உள்ளது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டதாக இந்த டேப்லெட் வந்துள்ளது.
இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 2 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 5,100 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 ஜி.பி. ரேம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.10,999. 4 ஜி.பி. ரேம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.11,999.