ஹலோ பிளஸ் ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்

Update:2023-08-16 17:17 IST

நாய்ஸ்பிட் நிறுவனம் அழகிய வட்ட வடிவிலான ஸ்மார்ட் கடிகாரங்களை ஹலோ பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. 1.46 அங்குல அளவிலான அமோலெட் திரை, உலோக ஸ்டிராப்பைக் கொண்டது.

புளூடூத் இணைப்பு, உடல் நிலை, வானிலை, பங்குச் சந்தை நிலவரம், கேமரா கண்ட்ரோல், நினைவூட்டல், கால்குலேட்டர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 7 நாட்கள் வரை செயல்படும்.

இதன் விலை சுமார் ரூ.4,499. நோவா மாடல் விலை சுமார் ரூ.2,999. ஆர்க் மாடல் விலை சுமார் ரூ.1,399.

Tags:    

மேலும் செய்திகள்