ஹேய்ர் ஸ்மார்ட் டி.வி.

ஹேய்ர் நிறுவனம் ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-09-28 14:26 IST

வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹேய்ர் நிறுவனம் ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. 32 அங்குலம், 43 அங்குலம், 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் இவை 4-கே ரெசல்யூஷனை வெளிப்படுத்துபவையாக வந்துள்ளன.

டால்பி ஆடியோ சிஸ்டம் கொண்டது. கூகுள் அசிஸ்டென்ட் மூலம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனிய இசையை வழங்க 24 வாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. மல்டி கோர் கார்டெக்ஸ் சி.ஏ 55 பிராசஸர் உள்ளது. வை-பை இணைப்பு வசதி, குரோம்காஸ்ட், புளூடூத் 5.1 இணைப்பு வசதி, ஹெச்.டி.எம்.ஐ. 2.1, யு.எஸ்.பி. 2.0 இணைப்பு வசதிகளைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.16,990 முதல் ஆரம்பமாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்