கிளிட்ஸ் எல் புளூடூத் ஸ்பீக்கர்

Update:2023-05-28 12:28 IST

புரோமோட் நிறுவனம் புதிதாக கிளிட்ஸ் எல் என்ற பெயரில் வெளியிடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.

உருளை வடிவில் எடை குறைவானதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப் பகுதியில் தொடு விரல் செயல்பாடுகளைக் கொண்டதாக பொத்தான்கள் உள்ளன. இதிலிருந்து 10 வாட் திறன் கொண்ட இசை வெளி யாகும். புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. 10 மீட்டர் சுற்றளவுக்கு இசை துல்லிய மாகக் கேட்கும். ஏ.யு.எக்ஸ்., வயர்லெஸ் மற்றும் யு.எஸ்.பி. இணைப்பு வசதி கொண்டது.

மைக்ரோ எஸ்.டி. கார்டை பயன்படுத்தும் வசதி கொண்டது. இதில் 1,800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 6 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.

கருப்பு, சிவப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.3,099.

Tags:    

மேலும் செய்திகள்