பயர்போல்ட் நிறுவனம் ஷார்க் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.83 அங்குல ஹெச்.டி. திரை, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. உள்ளீடாக மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது.
ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்பது மற்றும் நிராகரிப்பதை டயலின் மேல் பகுதி நகர்த்தலின் மூலம் மேற்கொள்ள முடியும். இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப் பட்டால் இந்த கடிகாரம் 25 நாட்கள் வரை செயல்படும். உடல் நிலை சார்ந்து இதய துடிப்பு, மாதவிடாய் சுழற்சி சார்ந்த பிரச்சினை, தூக்க குறைபாடு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட வற்றை துல்லியமாக உணர்த்தும்.
வீடியோ கேம் விளையாடு வதற்கான செயலிகளையும் இதன் மூலம் இயக்க முடியும். இதனால் பயணத்தின்போது இதிலும் கேம்களை விளை யாட முடியும்.
இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.1,799.