எபிக்பூம் ஸ்பீக்கர்

லாஜிடெக் நிறுவனம் தற்போது எபிக்பூம் என்ற பெயரிலான ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-09-28 14:14 IST

கம்ப்யூட்டர் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் லாஜிடெக் நிறுவனம் தற்போது எபிக்பூம் என்ற பெயரிலான ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இது முழுவதும் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரானது.

நீர், தூசி புகாதது, வெளியிடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது. 360 டிகிரி கோணத்தில் அறை முழுவதும் இசையைப் பரப்பும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. புளூடூத் இணைப்பு 55 மீட்டர் சுற்றளவு வரை செயல்படும். இதில் ஆண்ட்ராய்டு 8 இயங்கு தளம் உள்ளது. பேட்டரியின் மின் திறனை உணர்த்தும் இண்டிகேட்டரும், யு.எஸ்.பி. இணைப்பு வசதியும் கொண்டது.

வெள்ளை, சிவப்பு, கருப்பு, எலுமிச்சை மஞ்சள் நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.30,000.

Tags:    

மேலும் செய்திகள்