கோவோ நிறுவனம் கோபட்ஸ் 945 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்போன் மிகச் சிறந்த இசை அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் வி 5.3 இணைப்பு வசதி உள்ளதால், செல்போனிலிருந்து 30 அடி தூரம் வரை நீங்கள் இருந்தாலும் இணைப்பு தொடரும். தொடு விரல் செயல்பாடு கொண்டது.
இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 52 மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் 400 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் (இ.என்.சி.) உள்ளது. இதனால் பேச்சுகளை துல்லியமாகக் கேட்கலாம். இயர்போனின் விலை சுமார் ரூ.1,199.