கேனன் பவர் ஷாட் வி 10 கேமரா

புகைப்படக் கலைஞர்களுக்குத் தேவையான அதி நவீன கேமராக்களைத் தயாரிக்கும் சர்வதேச நிறுவனமான கேனன், தற்போது பவர்ஷாட் வி 10 என்ற பெயரில் கையடக்க அளவிலான கேமராவை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-06-01 21:03 IST

புகைப்படம் மட்டுமின்றி வீடியோவும் இதில் பதிவு செய்யலாம். யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது அனுபவங்களை வீடியோ காட்சிகளாகப் பகிர்ந்து கொள்ள விரும்புவோருக்கு மிகவும் ஏற்றது.

மடக்கும் வகையிலான ஸ்டாண்ட் கேமராவுடன் உள்ளது. இதனால் காட்சிகளைப் பதிவு செய்ய தனியாக டிரைபாட் ஸ்டாண்ட் தேவையில்லை. கேமராவில் உள்ளீடாக மைக்ரோபோன் உள்ளது. இதனால் காட்சி களை சுற்றுப்புற இசையுடன் பதிவு செய்யலாம்.

அதே சமயம் இரைச்சலைத் தவிர்த்து விடும் நுட்பம் கொண்டது. இதை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். ஸ்மார்ட்போனுடன் இணைத்தும் இதைப் பயன்படுத்தலாம்.

இதில் இ.ஓ.எஸ். இமேஜிங் தொழில்நுட்பம் உள்ளது. இதனால் உயர்தரத்தில் காட்சி களை பதிவு செய்ய முடியும். கேமராவின் கோணத்திற்கேற்ப இதன் திரையை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இடது கைப்பழக்கமுள்ளவர் களும் கையாளும் வகையில் இதன் வடி வமைப்பு உள்ளது. கம்ப்யூட்டருடன் இணைத்து இதை வெப் கேமராவாகவும் பயன்படுத்தலாம். 211 கிராம் எடை கொண்ட இந்த கேமராவின் விலை சுமார் ரூ.39,995.

Tags:    

மேலும் செய்திகள்