பென்கியூ நிறுவனம் புதிதாக டபிள்யூ. 4000 ஐ என்ற பெயரிலான எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. புளூடூத் இணைப்பு, டால்பி டிஜிட்டல் சவுண்ட் வசதி, ரிமோட் மூலம் செயல்படுதல் ஆகிய வசதிகளை இது கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், உள்ளீடாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரும் உள்ளது. 4-கே ரெசல்யூஷனில் மிகத் துல்லியமாக காட்சிகளை வெளிப் படுத்தும் இதன் விலை சுமார் ரூ.4 லட்சம்.