ஆப்பிள் 15 அங்குல மேக்புக் ஏர்

ஆப்பிள் நிறுவனம் 15.3 அங்குல லிக்விட் ரெடினா திரையைக் கொண்ட லேப்டாப்பை மேக்புக் ஏர் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

Update: 2023-06-15 16:15 GMT

இது தொடர்ந்து 18 மணி நேரம் இயங்குவதற்குத் தேவையான பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 6 ஸ்பீக்கர் அடங்கிய சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

மிகவும் மெல்லியதான (11.5 மி.மீ) அழகிய வடிவமைப்போடு இது வந்துள்ளது. ஹெச்.டி. கேமரா, மேக்சேப் சார்ஜிங் வசதி, மேக் இயங்குதளம் ஆகிய வசதிகளைக் கொண் டுள்ளது. வழக்கமான லேப்டாப் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் திரையை விட இத்திரையில் காட்சிகள் மிகத் துல்லியமாகத் தெரியும். அதற்கு லிக்விட் ரெடினா திரை உதவியாக உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,34,900 முதல் ஆரம்பமாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்