அமேஸ்பிட் பி.ஐ.பி. 5 ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்

Update:2023-08-23 13:48 IST

அமேஸ்பிட் நிறுவனம் பி.ஐ.பி. 5 என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.91 அங்குல டி.எப்.டி. எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்ட இதில் உள்ளீடாக மைக்ரோபோன், ஸ்பீக்கர் ஆகியவை உள்ளன. அலெக்ஸா ஆன்லைன் குரல்வழி கட்டுப்பாடு மூலம் செயல்படக் கூடியது. இதய துடிப்பு, மன இறுக்கம் உள்ளிட்டவற்றை அறிவுறுத்தும். 300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 10 நாட்கள் வரை செயல்படும். இதன் விலை சுமார் ரூ.7,485.

Tags:    

மேலும் செய்திகள்