டெல் நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்கென ஏலியன்வேர் எம் 16 மற்றும் ஏலியன்வேர் எக்ஸ் 14 ஆர் 2 என்ற பெயரில் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 13-வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் உள்ளது. வீடியோகேம்களுக்கு அவசியமான நிவிட்யா ஜி இ-போர்ஸ் ஆர்.டி.எக்ஸ். 40 சீரிஸ் இதில் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,84,990.
இவை 16 அங்குல கியூ ஹெச்.டி. திரை, 32 ஜி.பி. ரேம் மற்றும் 1 டி.பி. நினைவகம் கொண்டவை. ஏலியன் வேர் எக்ஸ் 14 ஆர் 2 மாடலின் விலை சுமார் ரூ.2,06,990.