விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன்

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி அல்காரஸ் ஆதிக்கம் செலுத்தினார்.;

Update: 2024-07-14 15:52 GMT

Image : AFP

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 7 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா) பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி அல்காரஸ் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 6-2,6-2,7(7)-6(4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.இதனால் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்