உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் - டிங் லிரென் இடையிலான 9-வது சுற்றும் டிரா

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் - டிங் லிரென் மோதிய 9-வது சுற்றும் டிராவில் முடிந்தது.

Update: 2024-12-05 15:39 GMT

Image Courtesy: @FIDE_chess / X (Twitter)

சிங்கப்பூர்,

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 8 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற 9-வது சுற்றும் டிராவில் முடிந்தது.

இன்று நடைபெற்ற 9-வது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 54-வது நகர்த்தலில் இருவரும் போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். நடப்பு தொடரில் இது 7-வது டிராவாகும். முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். குகேஷ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். 2-வது, 4வது, 5-வது, 6-வது, 7-வது மற்றும் 8-வது சுற்றுகள் டிராவில் முடிந்தன.

9-வது சுற்றும் டிராவில் முடிந்த நிலையில் இருவரும் தலா அரைபுள்ளி பெற்று 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். நாளை ஓய்வு நாளாகும். நாளை மறுநாள் 10-வது சுற்று போட்டி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்