பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: மீண்டும் தங்கம் வென்று சாதிப்பாரா? இந்தியாவின்'தங்க மகன்' நீரஜ் சோப்ரா

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.

Update: 2024-07-09 13:37 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இப்போவே அதிகரித்துள்ளது.

இதில் கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் தங்க மகனாக ஜொலித்த நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிகிறது.

நீரஜ் சோப்ரா: கடந்த டோக்கியோ ஒலிம்பிக் (2020) போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவை நோக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நீரஜ் சோப்ரா இந்த முறையும் தங்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி வென்றால் தடகள பிரிவில் அடுத்தடுத்து 2 தங்கம் வென்ற ஒரே இந்திய வீரர் என்று முன்னோடியாகத் திகழ்வார்.

 

நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. கடைசியாக பின்லாந்தில் அவர் கலந்து கொண்ட தொடரில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார் என்பதே அதற்கு காரணம். கடந்த முறை ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார் நீரஜ். வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில் 88.77 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று அசத்தினார். அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இந்தியாவுக்காக தனிநபர் தங்கப்பதக்கம் வென்று தந்தவர் நீரஜ். ஆகவே நீரஜ் சோப்ரா மீது இந்த முறையும் பெரிய கவனக்குவிப்பு விழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்